உ
முருகப்பெருமானின் முக்கிய திருத்தலங்கள்-பழனி-Part-2
திருமதி சாந்தா வரதராஜன்
இதை அடைய 660 படிகளில் ஏறிச் செல்ல வேண்டும். படிவரிசைகளில் சுமார் கால் பாகம் சென்றதும் யானைப்பதை என்ற மலை வழிப்பாதை ஒன்றும் பிரிந்து செல்கிறது. அதன் வழியாகவும் சென்று சேரலாம். இது பழமையும்,புதுமையும் கலந்து நிற்கும் பான்மை போலும். வெளிச்சுற்றில் வலம் வரும் போது ஒரு பக்கம் பாங்கர் மலைத்தொடர்ச்சி , மற்றொரு பக்கம் வையாவிபுரி ஏறி, இன்னொரு சார் பச்சைப்பசேல் என்று தோன்றும் வயல்கள் இவைகளை காணலாம்.கரடு முரடான மலைப்பாறைகள் இறைவன் திருச்சடையும், பசும் வயல்கள் உமையம்மையின் தோற்றத்தையும் வையாவிபுரி ஏரியின் நீர் நடுநாயகமாய் நின்று அருள் கந்தன் (அருள்) கருணை வெள்ளம் என்றும் கொள்ளலாம் போல் தோன்றுகிறது.
பழனி ஆண்டவர் சன்னதி மேற்கு நோக்கியது. திருவாயிலில் நுழைந்து மயில் மண்டபம், மணிகட்டி மண்டபம் தாண்டி இராஜ கோபுர வாயில் வழியாக பாரவேல் மண்டபத்தை அடையலாம். பாரவேல் மண்டபத்தின் கற்றூண்கள் அற்புத சிற்ப அமைப்புடன் பொற்புடன் நிற்கின்றன. அதை தாண்டினால் நவரங்க மண்டபத்தை சேரலாம். அங்கிருந்துதான் பழனியாண்டவர் திருகோலத்தை வணங்க வேண்டும். ஆண்டவனுக்கு அபிஷேகங்களும் பலவித அலங்காரங்களும் எந்நேரமும் நடந்து கொண்டேயிருக்கும்.
மலைக்கோயிலுள்ள பாண்டிய மன்னர் கல் வெட்டில் வைகாவூர் நாட்டு பழனிமலை என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பழனி என்ற பேர் வந்ததற்கு புராண கதையும் உண்டு.
தொடரும்
POST A COMMENT
புதன், 16 டிசம்பர், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please send your comments