விக்ருதி புத்தாண்டு புதிதாக பூக்கட்டும்.
கவிஞ்ஞர் திருமதி சாந்தா வரதராஜன்
விரோதி ஆண்டு கழிவதாலும், விக்ருதி ஆண்டு புகுவதாலும்
விசேஷ பூசைகளாலும், புது பஞ்சாங்கம் படிப்பதாலும்
பாரினில் புத்தாண்டு பயன்கள் பல உண்டு பரமனின் அருளால் நலன்கள் பல உண்டு.
விருந்தில் வெல்ல பாயசமும், வேப்பம்பூ பச்சடியால்
வாழ்வில் சுகமும், துக்கமும் இரண்டும் உண்டு
வாழ்வினில் வெற்றியா, தோல்வியா விதிப்படி வரும்
உற்றவை இவை என உரைவோரும் உண்டு.
இந்த புத்தாண்டு-
அன்பாலே வாழ்வினையே வென்றிடும்
அறிவாலே உலகினையே மாற்றிடும்
பண்பாலே அனைவரையும் கவர்ந்திடும்
பரிவாலே எவரையும் அணைத்திடும்
பாசத்தால் உலகோரை ஈர்ந்திடும்
பாராட்டி மனிதர்களை வாழ்த்திடும்
நேசத்தால் மாந்தர்களை இணைத்திடும்
நேர்மையான வாழ்கையில் வாழ்ந்திடும்
கனிவுடன் யாவரையும் நடத்திடும்
கண்ணான கடமையினைப் போற்றிடும்
பணிவுடனே மக்களிடம் பழகிடும்
பயனுள்ள செயல்களையே செய்திடும்
இந்த புத்தாண்டில்-
உழைக்கும் கரங்கள் உயரட்டும்
உழைப்பால் நல்வாழ்வு மலரட்டும்
உலகம் ஒற்றுமையால் இணையட்டும்
உரிமைகள் பல வந்து குவியட்டும்
உலகம் செழித்திட வாழ்ந்திடுவோம்
ஒற்றுமை ஓங்கிட வழிவகுப்போம்
கலகம், பசி, துயர் இன்றியே தான்
களிப்புற இறைவனை நாம் துதிப்போம்
புத்தாண்டு பிறந்த நாளில் - நாம்
புவிசிறக்க உறுதிமொழி ஏற்போம்
புகழோடு, பெயரோடு வாழ - நாம்
புதுமைகளைத் தினந்தோறும் படைப்போம்
வருக புத்தாண்டு விக்ருதி!
வருக யாம் வாழவே!
கவிஞ்ஞர் திருமதி சாந்தா வரதராஜன்
HAVE A NICE DAY !!
arivaale
HAVE A NICE DAY
HAVE A NICE DAY
Puthandu kavithai is refreshing
பதிலளிநீக்குputhandu kavithai gives new vigour.
பதிலளிநீக்குThis kind of kavithai give a pleasant start to the new year.
பதிலளிநீக்கு