சிவப்பரம்பொருள்- 2
சாந்தா வரதராஜன்
varadshantha@yahoo.com
சகல லோகங்களும் அழிந்து பஞ்ச பூதங்களும் ஒன்றுடன் ஒன்று ஐக்கியப்பட்டு பரம்பொருளைச் சேர்ந்து விடும். அனைத்திற்கும் எட்டாது விளங்கும் அந்தப் பரம் பொருளுக்கு தோற்றமோ, அழிவோ கிடையாது. அனைத்தும் அதனின்று உண்டாகி அதனையே அடைகின்றன. இது ஸ்ரிஷ்டியின் தத்துவம்.
இனி, மாயனும் அயனும் கண்ட மகாலிங்கம் பற்றி அறிவோம். ப்ரக்ரிதித் தத்துவமே கண்ணைப் பறிக்கும் ஒளியோடு லிங்கமாகியது. திங்கள் சூடி,
விஷம் அருந்திய முக்கனப்பெருமானே அந்த லிங்கமாகி நின்றார். மாதவனுக்கும் பிரமனுக்கும் யார் முதல்வன்? என்ற எண்ணம் தோன்றி இருவருக்கும் வார்த்தைகள் தடித்து சண்டை உண்டாகிவிட்டது. ஒருவரையொருவர் மூர்கதனமாக அடித்துக் கொள்ளத் தொடங்கினர். தாமே முதல்வன் என்பதை நிலைநாட்ட ஒருவர் மற்றவரை அழித்துவிடும் எண்ணத்தோடு தாக்கிக்கொண்டனர். அந்தச் சமயத்தில் அவர்கள் முன்பு ஒரு பிரகாசம் தோன்றியது. திடுக்கிட்ட இருவரும் சண்டையிட்டுக் கொள்வதை நிறுத்திவிட்டுப் பார்த்தனர். கண்ணைப் பறிக்கும் பிரகாசதினிடையே அரைப்பிழம்பு ஒன்று நிற்பதைக் கண்டனர். அதன் ஆதியோ, அந்தமோ அவர்களுக்குத் தெரியவில்லை. திடீரென்று தோன்றிய இவ்வுருவம் யாதென விளங்கவில்லை. இதன் தலையோ காலோ தெரிந்தால்தானே அறிய முடியும். எனவே இதன் 'முடியை பிரமனும்', 'அடி' யை மாதவனும் கண்டுவரப் புறப்பட்டனர்.
தொடரும்
HAVE A NICE DAY
POST A COMMENT
சனி, 17 ஏப்ரல், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please send your comments