HAVE A NICE DAY
DHANVANTHIRI BAGAVAAN
DHANVANTHIRI-MARUTHUVAKKADAVUL-2
திருமதி சாந்தா வரதராஜன்
பின்னர் 'மகாவிஷ்ணு', 'மோகினி' அவதாரம் எடுத்து அமுதத்தினை தேவர்களுக்கு அளித்தார் என்பது புராண வரலாறு. விண்ணுலகினர் நலனுக்காக அமுதினைத் தந்த தன்வந்திரி பகவான் , மண்ணுலகினர் {நலனுக்காக] ஆரோக்கியத்திற்காக 'ஆயுர்வேதம்' அருளினார்.தன்வந்திரி மகாவிஷ்ணுவின் அம்சம் என்று புராணங்கள் கூறுகின்றன. மண்ணுலக மக்களைக் காக்க மனம் கொண்டார். எனவே காசிராஜனின் மகனாகப் பிறந்தார். பல சித்தர்களிடம் கிரந்தங்களைக் கேட்டறிந்தார். அதன் பின் ஆயுளைக் காப்பதும், வேதத்திற்கு நிகரானதுமான மருத்துவ முறைகளை நூலாக எழுதினார். அதுவே ஆயுள் [ஆயுர்] வேதமாகும்.
வேலூர் மாவட்டம், சென்னை - பெங்களூர் சாலையில் வாலாஜாபேட்டை, கீழ் புதுப்பேட்டையில்,'' ஸ்ரீ தன்வந்திரி பகவான்'' ஆலயம் அமைந்துள்ளது. இக்கோயில் பல சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டது. இராஜஸ்தான், கேரளா போன்ற பல இடங்களிலும் , தமிழகத்தில் ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம், சென்னை, சேலம், ஆகிய பல இடங்களிலும் பிரகார சந்நிதிகளில் தன்வந்திரிக்கு இடம் உண்டு. ஆனால் இவருக்கு எனத் தனிக்கோயில் உலகத்திலேயே இங்கு மட்டும்தான் உள்ளது.
இனம்,மொழி,ஜாதி,மதம் என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்து மக்களும் ஒன்று சேர்ந்து இந்த ஆலயம் அமைவதற்குப் பாடுபட்டு உள்ளனர்.
இந்த ஆலயத்தில் கர்ப க்ருகதின்கீழ் 15 அடி ஆழத்தில் ஏழு அங்குலம் விட்டத்தில் செப்புக் குழாயின் நடுவின் ஏறத்தாழ 48 இலட்சம் பக்தர்களால் கைப்பட எழுதிய 54 கோடி மந்திரங்கள் 13 மொழிகளில் எழுதப்பெறப்பட்டு இந்தக் கர்ப கிருகத்தின் கீழ் வியக்கத்தக்க அளவில் யந்திரமாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இது ஓர் உலகச் சாதனையாகும். பக்தர்கள் கைப்பட எழுதிய இம்மகா மந்திரங்களுக் கஜபூஜை, கோபூஜை 1008 சுமங்கலி பூசை செய்து அமைக்கப்பட்டுள்ளது.
தொடரும்
The fundamentals of Yoga Vyaayaama: Presidential address
The future of Ayurveda
Thrigunaas in health and disease
POST A COMMENT
திங்கள், 27 டிசம்பர், 2010
செவ்வாய், 14 டிசம்பர், 2010
DHANVANTHIRI-MARUTHUVAKKADAVUL
"ஓம் நமோ பகவதே வாசு தேவாய தன்வந்தரையே அமிர்த கலச ஹஸ்தாய,
சர்வாமய வினாசனாய, த்ரைலோக்ய நாதாய ,ஸ்ரீ மஹா விஷ்ணவே நமஹா"
இதன் பொருளாவது "மகா விஷ்ணுவின் மறு அவதாரமான ஸ்ரீ தன்வந்திரி பகவானே! அமிர்த கலசத்தைக் கரங்களில் ஏந்தி எல்லா உயிர்களின் நோய்களைக் குணப்படுத்தும், மூன்று உலகங்களுக்கும் தலைவனே! வணங்குகிறோம் உன்னை! நலம் தருவீர் உடனே!"
ஸ்ரீ தன்வந்திரி பகவான் எவ்விதம் உதயமானார் என்பதை முதலில் அறிவோம். ஆயுளும் ஆரோக்கியம் நிலைக்க வேண்டும் என்பதற்காக, அமரர்களும் அசுரர்களும் சேர்ந்து கடலைக் கடைந்து கொண்டிருந்தார்கள். அப்போது அமுத கலசத்தினைக் கரங்களில் ஏந்தி வெளிப்பட்டார் தன்வந்திரி பகவான். வெண் பட்டாடை ஒளி வீச,அமுதக் குடத்துடன் தோன்றிய அவரைக் கண்டதும் சுரர்களும், அசுரர்களும் ஆனந்தம் அடைந்தனர்.
தொடரும்
புதன், 1 டிசம்பர், 2010
MANAKKULA VINAYAGAR-2
இனி,அருள்மிகு மணக்குள விநாயகர் புராணம் வரலாறு,திருக்கோயில் தொன்மை,சிறப்பு,திருக்கோயில் அமைப்பு,வழிபாடு விழாக்கள் ஆகியவற்றை சற்று நோக்குவோம்.புதுச்சேரியில் பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சிக் காலத்தில் தங்களுக்காக ஒரு கோட்டையை கட்டிக்கொண்டனர்.அக்கொட்டைக்குப் பின்புறம் அமைந்திருந்த திருக்கோயிலே மணக்குள விநாயகர் திருக்கோயிலாகும். இக்கோயில் இருக்கும் இடத்திற்குச் சமீபத்தில் மேலண்டைப் பகுதியில் ஒருகுளம் இருந்ததாகவும்,அது கடற்கரைக்கு அருகில் இருந்ததால் அவ்விடத்தில் மணல் அதிகமாக இருந்ததாகவும், அதன் காரணமாக அக்குளத்திற்கு "மணற்குளம்" என்று பெயர் வந்ததாகவும் சான்றுகளுடன் கூருவர்.இந்த மனக்குளத்தின் கீழ்கரையில்தான் விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. இதனால் இந்த ஆலயத்திற்கு 'மணற்குள விநாயகர் ஆலயம்' என்று பெயர் ஏற்பட்டது.
தற்சமயம் இந்த ஆலயத்தின் அருகில் குளம் ஏதும் இல்லை. காலப்போக்கில் மறைந்து போயிருக்கலாம் என்று கூறப்படுகிறது.இங்கு கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் விநாயகப் பெருமாள் மனர்குளதுப் பிள்ளையார் என்றும், மனர்குலத் தாங்கரைப் பிள்ளையார் என்றும் அழைக்கப்படுவதால், இங்கு 'மணற்குள விநாயகர்' என்பதே இவ்வினாயகப் பெருமான் பெயர் என்பது சந்தேகமின்றி விளங்குகின்றது.இன்றைக்கும் கருவறையின் கண்உள்ள விநாயகப் பெருமான் படிமத்துக் கருகில் நீர் சுரந்து வரும் இயல்பைக் காணலாம்.புவனேச விநாயகர் என்ற பெயர் பிற்காலத்தில் பெயர் மருவி 'மணக்குள விநாயகர்' என்று எல்லோராலும் அழைக்கப்படுகிறது.
தொடரும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)