OWL

OWL
OWL

WELCOME

WEB HOTING

Web.com Web Hosting

T.NAGAR SHOPS


View Retail stores in T-Nagar in a larger map

traffic

click bank

amazon

POST A COMMENT

சனி, 30 ஜனவரி, 2010

PAZHAMUDHIRSOLAI-2


உ 
முருகப்பெருமானின் முக்கிய திருத்தலங்கள்- பழமுதிர்சோலை-2                
திருமதி சாந்தா வரதராஜன்  

   இதற்கு போகும் வழியில் முன்பு வேல் பொறித்த சிலை ஒன்றை மக்கள் வழிபட்டு வந்தனர். அதுவே பழமுதிர்சோலை மலையாக வணங்கினர்.இப்பொழுது ஒரு முருகன் கோயிலாக எழுந்திருக்கிறது. இங்கே முருகன் சந்நிதி முன்பு இருந்ததென்பதற்குத் திருப்புகழ் சான்று தருகிறது.     
  "ஆயிர முகங்கள் கொண்ட நூபுர மிரங்கு கங்கை 
          ஆறமர வந்தலம்பு துறை சேர..."

  "சோதியின் மிகுந்த செம்பொன் மாளிகை விளங்குகின்ற 
  சோலைமலை வந்த கந்த பெருமாளே..."  

என்று நூபுர கங்கையும் சோலை மலையும் இணைத்து  முருகனை பாடுகிறார். சரவணப் பொய்கை இருந்ததென்று தெரிவதனால் முருகனுடைய திருக்கோயிலும் இருந்திருக்கவேண்டும்.

  "மாமனாகிய அழகனையும் மருமகனாகிய அழகனையும் தரிசித்துக் கொண்டு,
 ஆரும் இணையில் அழகா, முருகாபைத் 
 தாரணியும் மார்பா, தணி முதல்வா - காரணிந்து
 மேயதிருச் சோலைமளையுரையும் வித்தகநின்
 தூயமலர்ப்பாதம் துணை"

 என்று போற்றுவோம்.

  இனி ஆறு படை வீடுகளை தவிர தமிழ் நாட்டில் உள்ள முருகப்பெருமானின் மற்ற முக்கியமான ஸ்தலங்களை காண்போம்.

தொடரும் 

                  

HAVE A NICE DAY

சனி, 23 ஜனவரி, 2010

THIRUTHANI-4






உ 
முருகப்பெருமானின் முக்கிய திருத்தலங்கள்- திருத்தணி-4
திருமதி சாந்தா வரதராஜன்   


  மேலும் 
 "ஐயனே நினையன்றிஎங்கணும்
 பொய்யநேர் கொறா புகலிலாமையால்   
வெய்யனே னென வெறுத்து விட்டிடேல்     
மெய்யனே திருத்தணிகை வேலனே"


என்று இராமலிங்க அடிகள் பாடியுள்ளார். மாதத்தில் கிருத்திகை சிறந்த திருநாள், அடிக்கிருத்திகை,கார்திகைக் கிருத்திகை, மாசி கிருத்திகை விசேஷமாக கொண்டாடபடு கின்றன.இங்கு பக்தர் பற்பல காவடி எடுப்பது வழக்கம். முக்கியமாக புஷ்ப
காவடி எடுப்பது. அப்பொழுது சரவணப் பொய்கையில் தெப்பத் திருவிழா நடைபெறும்.சித்திரையில் தெய்வயானையுடனும், மாசியில் வள்ளியம்மையுடனும் முருகப் பெருமாளுக்கு இரண்டு பிரம்மோற்சவங்கள் நடைபெறுகின்றன.     


     6  பழமுதிர்சோலை 
  இது முருகப் பெருமானின் ஆராம்படை வீடாகும். திருமுருகாற்றுப்படை, "இழுமென இழி தரும் அருவிப் பழமுதிர்சோலை 
மலை கிழவோனே" என்று கூறுகிறது.
இப்பொழுது அழகர் மலை என்று வழங்கும் இடமே இரண்டு அழகர்களுக்கு உரிய தலமாக விளங்குகிறது. ஓர் அழகர் கள்ளழகர் என்று சொல்லும் சுந்தர ராஜ பெருமாள், மற்றும் ஒருவன் "என்றும் 
இளையாய் அழகியாய்" என்று போற்றும் முருகன். மதுரைக்கு வடக்கே ஏறத்தாழப் பன்னிரண்டு மைலில் இருக்கிறது. "அழகர் கோயில்" இந்தக் கோயிலில் அடிவாரத்தில் இருக்கிறது. பச்சைப் பசேலேன்ரும் காட்சிகளுடன் மலையும் அழகாகவே இருக்கிறது. சோலை மலை, திருமாலிருன்ஜோலைமலை, திருமாலிருன்குன்ரம், என்றும் இந்த மலைக்கு மேல் இரண்டு மைல் தூரத்தில் சிலம்பாறு இருக்கிறது.


தொடரும் 


           


சனி, 16 ஜனவரி, 2010

THIRUTHANI-3







உ 
முருகப்பெருமானின் முக்கிய திருத்தலங்கள்- திருத்தணி-3
திருமதி சாந்தா வரதராஜன்   

 இரண்டாவது உட்ப்ராகாரத்தில் வந்து வலம் வரும் போது தெற்குப் பிரகாரத்தில் காமாட்சி ஏகாம்பரநாதர் சன்னதியும்,மேற்கு பிரகாரத்தில் ஆறுமுக சுவாமி சந்நிதியும், வடக்கு பிரகாரத்தில் குமரேலிங்கேர் சந்நிதியும், வடகிழக்கு மூலையில் ருத்ராட்ச விமானத்தில் உற்சவ மூர்த்தியும் கிழக்குப் பிரகாரத்தின் வடபால் ஆறுமுக நயினார் உற்சவ மூர்த்தியும், ஆபத்சகாய விநாயகர் சந்நிதியும், நவவீரர்கள், சூரியர் இவர்கள் சந்நிதியும் இருக்கின்றன.

  மூன்றாவது உட்ப்ரகாரம் செல்ல பஞ்சாட்சரப்படிகள் என்று ஐந்து படிகள் ஏறிப் போக வேண்டும். உள்ளே நுழைந்ததும் முருகப் பெருமான் திருக்கோலக் காட்சியைக் காணலாம். குமரக் கடவுளுக்குரிய பதினாறு வகை உருவங்களில் ஞ்யான சக்திதரர் என்றும் திருஉருவமே திருத்தணியில் இருப்பது. வலது திருக்கரத்தில் ஞான சக்தியாகிய வேலும், இடது திருக்கரம் தொடையிலும் அமைந்துள்ளன. விஷ்ணு ஆலயங்களில் சடகோபம் சாதிப்பது போல இந்த சந்நிதியிலும் முறுகர்திருவடி வணங்குவோர் தலையில் வைக்கப்படுகிறது. திருநீறு , சந்தனம் இவைகளும் வழங்கப்படுகின்றன. இக்கோயிலில் உள்ள சந்தனக்கல் பலநூற்றுக்கணக்கான ஆண்டுகளாய் பயன்பட்டும் தேய்வுபடாமல் ஜோதி வீசுகின்ற அணுக்களுடன் காணப்படுகிறது. இதில் அரைக்கப்பட்ட சந்தனத்தை உட்கொண்டால் சகல நோய்களும் தீரும் என்பர். தணிகை பெருமானை வணங்கிய பின்னர், வடக்கே தேவயானை சந்நிதியும், தெற்கே வள்ளியம்மை சந்நிதியும் தரிசிக்க வேண்டும்.
   இங்கு விஷ்ணு தீர்த்தம், பிரமசுனை, இந்திரா நீல சுனை, முதலிய தீர்த்தங்கள் இத் தலத்தில் உள்ளன. கந்தரலங்காரத்தில்,
 "கோடாதா வேதனுக்கு யான் செய்த 
     குற்றமென்  குன்றெறிந்த 
  தாடாளனே தென் தனிகைக்குமரா 
       நின் தண்டையந்தாள் 
  சூடாத சென்னியும் நாடாத கண்ணும் 
       தொழாத கையும் 
  பாடாத நாவும் எனக்கே தெரிந்து 
        படைத்தனனே" 

 என்று வரும் பாடல் மிக அழகு படைத்தது.


தொடரும் 
                   

சனி, 9 ஜனவரி, 2010

THIRUTHANI-2







உ 
முருகப்பெருமானின் முக்கிய திருத்தலங்கள்- திருத்தணி-2
திருமதி சாந்தா வரதராஜன்   

 இத்தலம் சித்தூர் மாவட்டத்தில் இருக்கிறது. தொண்டை நாட்டில் உள்ளதாகத் தமிழில் நூல்கள் கூறுகின்றன. இதற்கு தணிகாசலம்,        
தணிகை, செருத்தணி,திருத்தணிகை,   
திருத்தணியல்,நீலகிரி,நீலோத்பலகிரி
உற்பலசலம்,குவளைசிகரி,கல்லாரகிரி,காவிமலை,செங்கல்வகிரி, கந்தகிரி,இந்திரநகரி,எனப்பல பெயர்கள் வழங்கப்படுகின்றன.முருகப் பெருமான் சூரருடனும்,வேடருடனும்,
போர் முடிந்து சிந்தணிந்து அமர்ந்த இடமாதலால் தணிகை என்றும், கடவுளை  தணிகாசலம் என்றும் கூருவர்.                                                                                                                                                      


 குமரக் கடவுள் மலை மீது கோயில் கொண்டுள்ளார். கோயில் மலை உச்சியில் கிழக்குநோக்கிஇருக்கிறது.    
வடக்கிலும் தெற்கிலும் பச்சரிசிமலை, பிண்ணாக்கு மலை என்ற இரண்டு மலை மீது செல்ல நன்றாக கட்டப்பட்ட படிக்கட்டுகள் இருக்கின்றன. மலையடிவாரத்தில் படிகள் தொடங்குமிடத்தில் திருக்குளம் அழகிய காட்சியளிக்கிறது. இதற்கு சரவணப்பொய்கை என்றும், குமார தீர்த்தம் என்றும், பெயர்கள் உண்டு. அடிவாரத்திலிருந்து மலையுசிலுள்ள கோயிலையடைய 365  படிகளில் ஏறிச் செல்ல வேண்டும். பாதி வழியில் பிரம சுனை, விநாயகர், பிரமலிங்கம் இவைகள் உள்ளன. உச்சியையடைந்ததும் தேர் வீதி தென்படுகிறது. இவ்வீதியை வலம் வந்தால் தெற்கு வாயிலுக்கு நேரே இந்திர நீல சுனை இருக்கிறது. மேற்கு வெளி பிரகாரத்தில் செங்கழுநீர் விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. தேர் வீதி சுற்றி கிழக்கு வாயிலாக வலம் வந்தால் தென்மேற்கு மூலையில் உமாமகேஸ்வரர் கோயில் உள்ளது. கிழக்கு பிரகாசத்தில் விநாயகரும், ஐராவதமும் காணலாம்.


தொடரும் 
                                       

சனி, 2 ஜனவரி, 2010

THIRUVAVINANKUDI-2



உ 
முருகப்பெருமானின் முக்கிய திருத்தலங்கள்-திருவாவினன்குடி   -Part-2
திருமதி சாந்தா வரதராஜன் 
சுவாமிமலை என்னும் பதி கும்பகோணத்திற்கு வடகரையில் இருக்கிறது. இதற்கு திருவேரகம், சுவாமி(மலை) ஏறக வெற்பு, சுந்தராசலம், குருகிரி, குருமலை, தாத்ரீகரி, போன்ற பெயர்கள் திருப்புகழ் பாடல்களிலும், மற்ற நூல்களிலும் காணப்படுகின்றன. பிரணவ உபதேசம் கேட்ட பின்பு சிவபெருமான் முருகனை நோக்கி நீ தான் எனக்கு சாமி; ஆதலால் இத்தலம் "சுவாமி மலை " என வழங்குக என்று அருளிய படியால் சுவாமி மலை என்ற பெயர் உண்டாயிற்று. ஏற்+அகம் = ஏரகம் என்றால் அழகும் எழுச்சியும் உள்ள இடம் என்று பொருள். முருகப் பெருமான் ஒரு செயகுன்றின் மேல் எழுந்தருளியுள்ளார். சுவாமிநாதன், குருநாதன், தகப்பன்சாமி, என்ற நாமங்கள் அவருக்கு வழங்கப்படுகின்றன. வச்சிரதீர்த்தம், சரவண தீர்த்தம் இவை கோயிலுக்குள் இருக்கிறன. குமாரதாரை என்பது காவிரியாற்றுத் தீர்த்தம். கீழ் வீதியில் நேத்திரபுஷ்கரிணி அல்லது சுவாமி புஷ்கரணி என்ற திருக்குளம் இருக்கிறது. இந்தத் தல விருட்சம் நெல்லி மரம். மலைப்படிக்கு கிழக்கு ஓரமாக இருக்கிறது. தைப்பூசம், பங்குனி உத்திரம், கார்த்திகைத் திங்கள், சித்திரை மாதம் பெரும் விழா நடைபெறும். இங்கு சுவாமிநாதனின் கம்பீரமான திருவுருததோற்றம் கண்கவர் வனப்பு உடையது. இளைன்ஞராகவும், மன்னராகவும், துறவியாகவும், அலங்கரிக்கப்பட்டு அளிக்கும் காட்சி கண்களை விட்டு அகலாது. இங்கு பக்தர்கள் பால் காவடி எடுப்பது வழக்கம்.


5 . திருத்தணி 
 குன்றுதோறாடல் என்பது குறிஞ்சி நிலத்துக்குத் தெய்வமாகிய முருகன் மலைமேல் கோயில் கொண்டுள்ள எல்லாத் தலங்களையும் குறிக்கும். "மலையிற் சிறந்தது திருத்தணி மலையே" என்பர் ஆன்றோர். கந்தபுராணத்தில் "வரையிடங்கிரிர் சிறந்த இத்தணிகைமால் வரையே" என்று கூறப்பட்டிருக்கிறது. ஆதலால் குன்றுதோராடலில் முதல் தலமாகக் கொள்ளப்படுவது திருத்தணியே ஆகும். ஐய்ந்தாம் படை வீடாக வழங்கப்படுகிறது.


தொடரும்