உ
முருகப்பெருமானின் முக்கிய திருத்தலங்கள்- திருத்தணி-2
திருமதி சாந்தா வரதராஜன்
இத்தலம் சித்தூர் மாவட்டத்தில் இருக்கிறது. தொண்டை நாட்டில் உள்ளதாகத் தமிழில் நூல்கள் கூறுகின்றன. இதற்கு தணிகாசலம்,
தணிகை, செருத்தணி,திருத்தணிகை,
திருத்தணியல்,நீலகிரி,நீலோத்பலகிரி
உற்பலசலம்,குவளைசிகரி,கல்லாரகிரி,காவிமலை,செங்கல்வகிரி, கந்தகிரி,இந்திரநகரி,எனப்பல பெயர்கள் வழங்கப்படுகின்றன.முருகப் பெருமான் சூரருடனும்,வேடருடனும்,
போர் முடிந்து சிந்தணிந்து அமர்ந்த இடமாதலால் தணிகை என்றும், கடவுளை தணிகாசலம் என்றும் கூருவர்.
குமரக் கடவுள் மலை மீது கோயில் கொண்டுள்ளார். கோயில் மலை உச்சியில் கிழக்குநோக்கிஇருக்கிறது.
வடக்கிலும் தெற்கிலும் பச்சரிசிமலை, பிண்ணாக்கு மலை என்ற இரண்டு மலை மீது செல்ல நன்றாக கட்டப்பட்ட படிக்கட்டுகள் இருக்கின்றன. மலையடிவாரத்தில் படிகள் தொடங்குமிடத்தில் திருக்குளம் அழகிய காட்சியளிக்கிறது. இதற்கு சரவணப்பொய்கை என்றும், குமார தீர்த்தம் என்றும், பெயர்கள் உண்டு. அடிவாரத்திலிருந்து மலையுசிலுள்ள கோயிலையடைய 365 படிகளில் ஏறிச் செல்ல வேண்டும். பாதி வழியில் பிரம சுனை, விநாயகர், பிரமலிங்கம் இவைகள் உள்ளன. உச்சியையடைந்ததும் தேர் வீதி தென்படுகிறது. இவ்வீதியை வலம் வந்தால் தெற்கு வாயிலுக்கு நேரே இந்திர நீல சுனை இருக்கிறது. மேற்கு வெளி பிரகாரத்தில் செங்கழுநீர் விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. தேர் வீதி சுற்றி கிழக்கு வாயிலாக வலம் வந்தால் தென்மேற்கு மூலையில் உமாமகேஸ்வரர் கோயில் உள்ளது. கிழக்கு பிரகாசத்தில் விநாயகரும், ஐராவதமும் காணலாம்.
தொடரும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please send your comments