உ
முருகப்பெருமானின் முக்கிய திருத்தலங்கள்-திருவாவினன்குடி -Part-2
திருமதி சாந்தா வரதராஜன்
சுவாமிமலை என்னும் பதி கும்பகோணத்திற்கு வடகரையில் இருக்கிறது. இதற்கு திருவேரகம், சுவாமி(மலை) ஏறக வெற்பு, சுந்தராசலம், குருகிரி, குருமலை, தாத்ரீகரி, போன்ற பெயர்கள் திருப்புகழ் பாடல்களிலும், மற்ற நூல்களிலும் காணப்படுகின்றன. பிரணவ உபதேசம் கேட்ட பின்பு சிவபெருமான் முருகனை நோக்கி நீ தான் எனக்கு சாமி; ஆதலால் இத்தலம் "சுவாமி மலை " என வழங்குக என்று அருளிய படியால் சுவாமி மலை என்ற பெயர் உண்டாயிற்று. ஏற்+அகம் = ஏரகம் என்றால் அழகும் எழுச்சியும் உள்ள இடம் என்று பொருள். முருகப் பெருமான் ஒரு செயகுன்றின் மேல் எழுந்தருளியுள்ளார். சுவாமிநாதன், குருநாதன், தகப்பன்சாமி, என்ற நாமங்கள் அவருக்கு வழங்கப்படுகின்றன. வச்சிரதீர்த்தம், சரவண தீர்த்தம் இவை கோயிலுக்குள் இருக்கிறன. குமாரதாரை என்பது காவிரியாற்றுத் தீர்த்தம். கீழ் வீதியில் நேத்திரபுஷ்கரிணி அல்லது சுவாமி புஷ்கரணி என்ற திருக்குளம் இருக்கிறது. இந்தத் தல விருட்சம் நெல்லி மரம். மலைப்படிக்கு கிழக்கு ஓரமாக இருக்கிறது. தைப்பூசம், பங்குனி உத்திரம், கார்த்திகைத் திங்கள், சித்திரை மாதம் பெரும் விழா நடைபெறும். இங்கு சுவாமிநாதனின் கம்பீரமான திருவுருததோற்றம் கண்கவர் வனப்பு உடையது. இளைன்ஞராகவும், மன்னராகவும், துறவியாகவும், அலங்கரிக்கப்பட்டு அளிக்கும் காட்சி கண்களை விட்டு அகலாது. இங்கு பக்தர்கள் பால் காவடி எடுப்பது வழக்கம்.
5 . திருத்தணி
குன்றுதோறாடல் என்பது குறிஞ்சி நிலத்துக்குத் தெய்வமாகிய முருகன் மலைமேல் கோயில் கொண்டுள்ள எல்லாத் தலங்களையும் குறிக்கும். "மலையிற் சிறந்தது திருத்தணி மலையே" என்பர் ஆன்றோர். கந்தபுராணத்தில் "வரையிடங்கிரிர் சிறந்த இத்தணிகைமால் வரையே" என்று கூறப்பட்டிருக்கிறது. ஆதலால் குன்றுதோராடலில் முதல் தலமாகக் கொள்ளப்படுவது திருத்தணியே ஆகும். ஐய்ந்தாம் படை வீடாக வழங்கப்படுகிறது.
தொடரும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please send your comments