சிவ பூஜை |
சிவலிங்க தத்துவம் - 9
திருமதி சாந்தா வரதராஜன்
ருத்ராட்சங்களில் ஒருமுக மணி கிடைப்பது அரிது என சொல்லப்படுகிறது. அப்படி அது கிடைக்கும் பட்சத்தில், அது இலந்தம் பழம் அளவு இருக்குமானால் சுகம் அதிகமாகும். நெல்லிக்காய் அளவு இருந்தால் துக்கங்கள் நீங்கும். கடலை அளவு உள்ளது மிகவும் விசேஷமானது. இம்மையிலும், மறுமையிலும் சகல நன்மைகளையும் கொடுக்க வல்லது. குன்று மணி அளவு உள்ளது காரிய சாதகம் செய்யும். ருத்ராட்சங்களை அணிய விரும்புபவன் அவற்றை பொருள் கொடுத்தே பெறவேண்டும்.தானமாக பிறரிடமிருந்து வாங்கக் கூடாது. பணம் கொடுத்து வாங்க இயலாதவன் தன் புண்ணியத்தை தத்தம் செய்தாவது பெற வேண்டும். ருத்ராட்சமாலை அணிந்தவனைப் பார்த்தால் பூதப்ரேத பிசாசங்கள் ஓடிவிடும்.
அடுத்து, ஜோதிர் லிங்கங்களை பற்றி சூதர் கூறிய விளக்கங்களைக்கான்போம். ஜோதிர்லிங்கங்கள் பன்னிரண்டு வகைப்படும். சௌராஷ்ட்ரத்தில் சோமநாத லிங்கம் இருக்கிறது. ஸ்ரிசைலதிலுள்ள லிங்கத்திற்கு மல்லிகார்ஜுன லிங்கம் என்று பெயர். உஜ்ஜைனியில் மகாகால லிங்கமும், ஓங்கார லிங்கமும் உள்ளன. ஹிகோதிரியில் கேதாரலிங்கமும், டாகினியில் பீமசங்கரளிங்கமும், காசியில் விச்வேஸ்வரலிங்கமும் கோதாவரி தீர்த்தத்தில் த்ரியம்பக லிங்கமும், சிதாபுரத்தில் வைதியனாதலிங்கமும் இருக்கின்றன. நாகேஸ்வர லிங்கம் தாருகா வானத்திலும், இராமேஸ்வர லிங்கம் சேதுவிலும், குச்மேசலிங்கம் சிவாலயத்திலும் உள்ளன. ஜோதி லிங்கங்கள் பன்னிரண்டின் பெயரையும் எவனொருவன் விடியற்காலத்தில் எழுந்திருந்து பயபக்தியோடு ஜபிக்கிறானோ அவன் பாவங்களிலிருந்து விடுபட்டு காரிய சித்தியை அடைவான். இவற்றைப் பூசிப்பவர்கள் பிறவி ஒழிந்து பகவானின் சந்நிதானத்தை அடைவார்கள்.
தொடரும்
அடுத்து,