HAVE A NICE டே
சிவ பூஜை
சிவலிங்க தத்துவம் - 8
திருமதி சாந்தா வரதராஜன்
ஆயிரத்தொரு நூறு ருதிராட்சங்களை ஒருவன் தரிப்பானகில் அவன் ருதிரஸ்வரூபியாக விளங்குவான். ஐந்நூற்றைம்பது ருதிராட்சங்களால் கிரீடம் செய்து அணிபவன் சிவசாநிதியத்தை அடைவான். உபவீதமாகத் தரிப்பதினால் அறுபது ருதிராட்சங்களை அணிய வேண்டும். முக்திக்கு ஒருவன் சிகையில் மூன்றும், இருகாதுகளிலும் ஐந்து அல்லது ஆரும்,கழுத்தில் நூற்றௌன்ரும், புஜத்தில் பதினொன்றும், இருகாதுகளில் சுற்றிலும் பதினொன்றும், மணிக்கட்டில் பதினொன்றும் பூணூலில் மூன்றும் அணியவேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ளது. ருத்ராட்சமனிகளைக் கொண்டு ஒருவன் நூறு முறை சிவநாமங்களை ஜபிப்பானாகில், ஆயிரம் முறை ஜபித்த பலனை அடைவான்.
ருத்ராட்சங்களிலும் பலவகை உள்ளன. ஒரு முகம் உடையது சகல காரிய சித்தியை அளிக்கும். இருமுகம் கொண்டது லஷ்மிகடாட்சதை அளிக்க வல்லது. மூன்று முகம் கொண்டது நினைத்த காரியத்தை விருத்தி செய்யும். நான்கு முகங்களை உடையது சதுர்வித புருஷார்த்தங்களையும் கொடுக்கவல்லது. ஐந்து முகங்களோடு கூடியது சகல பாவங்களையும் போக்கிவிடும்.
தொடரும்
POST A COMMENT
சனி, 18 செப்டம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please send your comments