சிவபூஜை
சிவலிங்க தத்துவம் - 5
திருமதி சாந்தா வரதராஜன்
சிவபெருமானை குறப்பிட்ட மலர்களால் அர்ச்சித்தால் அதற்கேற்ப பலன்கள் கிடைக்கும். தாமரை மலர்,வில்வம் சதபத்ரம் இவைகளால் அர்சிப்பவன் பெரும் தனத்தை அடைவான்.பரிசுத்தமான பத்துக்கோடி மலர்களால் சிவனை பூஜிப்பவன் ராஜபோகத்தை அடைவான். கல்வி கேள்விகளில் சிறந்துவிளங்கப் பன்நீராயிறது ஐந்நூறு மலர்களால் அர்ச்சிக்க வேண்டும். சத்துரு பயம் நீங்கப் பத்தாயிரம் மலர்களால் அர்ச்சிக்க வேண்டும்.கோடி மலர்களைக் கொண்டு அர்ச்சித்தால் ஞானம் உண்டாகும். ஐந்து கோடி மலர்களால் அற்சிப்பவனுக்கு முக்தி கிடைக்கும். அரைக்கோடி மலர்களால் அர்ச்சித்து ம்ரிதுனஜய மந்திரத்தை மந்திரத்தை ஐந்துலட்சம் உருஜபித்தால் சிவபெருமான் பிரத்யட்சமாவார். லட்சம் அருகம்புல்லால் அர்ச்சனை செய்பவனுக்கு தீர்காயுசு ஏற்படும். கருவூமத்தையால் அர்ச்சித்தால் புத்திரப் ப்ராப்தி உண்டாகும். லட்சம் கரவீர புஷ்பங்களால் அர்ச்சிப்பவனுக்கு சர்வ ரோகங்களும் நீங்கிவிடும். மல்லிகை அழகிய மனைவியையும், மலைமல்லி தானிய சம்பத்தும் கொடுக்கும். சண்பகம், தாழை ஆகிய இரு மலர்களும் சிவபூஜைக்கு உகந்ததல்ல.
தொடரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please send your comments