சிவபூஜை
சிவலிங்க தத்துவம் - 7
திருமதி சாந்தா வரதராஜன்
நைமிசாரண்ய வாசிகளான முனிவர்களுக்கு சூதமுனிவர் சிவமகாத் மியத்தை எடுத்துரைத்தார் என்றும் ஜோதிர் லிங்கங்களைப் பற்றியும் கூறினார் என்றும் சிவபுராணம் குறிப்பிடுகிறது. ருதிராட்சம் தரிப்பதின் பலன்களும் கூறப்பட்டுள்ளது. இவற்றை சுருக்கமாக நோக்குவோம்.
சிவபெருமானின் திவ்விய சரிதங்களை ஒருவன் கேட்பானாகில் அவன் சகல பாவங்களும் நீங்கிப் பரிசுதனாகுவான்.அவன் மூலம் அவன் வம்சமே விளங்கும். நெற்றியில் விபூதியும், கழுத்தில் ருதிராட்சமும் தரித்து சதா சிவநாமங்களை உச்சரிப்பவனை ஒருவன் தரிசிப்பானாகில், கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சந்திக்கும் திரிவேணி சங்கமத்தில் நீராடிய பலன்கிட்டும். அவனிடத்தில் சிவநாமமே கங்கையாகவும், விபூதியே யமுனையாகவும்,ருதிராட்சமே சரஸ்வதியாகவும் விளங்குவதாகச் சொல்லப்படுகிறது.
தொடரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please send your comments