OWL

OWL
OWL

WELCOME

WEB HOTING

Web.com Web Hosting

T.NAGAR SHOPS


View Retail stores in T-Nagar in a larger map

traffic

click bank

amazon

POST A COMMENT

சனி, 31 ஜூலை, 2010

SIVALINGA THATHUVAM-1

HAVE A NICE DAY




 அமர்நாத் சிவலிங்கம் 
              
                  


         சிவலிங்க தத்துவம் - 1 
  திருமதி சாந்தா வரதராஜன் 


   பரம்பொருலானது அகில உலக இயக்கத்திற்கும் மூல காரணமாகும். அந்த பரம்பொருளின் சக்தியானது ஜ்யோதிர் லிங்கத்திநின்று வெளிப்பட்டு வந்ததே சிவபிரானின் தோற்றமாகும்.அதியாச்சர்யமான அழகோடும், ஐந்து முகங்களோடும்,பத்து கரங்களோடும் அனேக வித ஆபரணங்களை அணிந்து  கொண்டு கம்பீரமாகப் பரம்பொருளாகிய சிவபெருமான் சர்வலட்ச்னங்களோடு தோன்றினார் என்று ஸ்ரீ சிவபுராணம் விளக்குகின்றது. இவரை "சிவம்" என்றும் "பிரம்மம்"என்றும் அழைப்பதுண்டு. அனைத்துமே அவர் வடிவம் தான். அவரால்தான் அண்டசராசரங்களும் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. ஸ்ருஷ்டி,ஸ்திதி,சம்காரம் எனப்படும் மூவகைக் காரியங்களையும் கவனித்து செயல்படும் சக்திகளும் இவரால் தோற்றுவிக்கப்பட்டவர்கள் தான். சத்தியமாயும், ஞானரூபமாயும் அழிவு என்பதே இல்லாததுமான சிவரூபமே முதொழில்களும் நடைபெற மூலகாரணம் ஆகும். சிவனை லிங்கத் தோற்றத்தில் இருப்பதாக எண்ணித் தியானம் செய்தால் போதும். சிவனைத் த்யாநிப்பவர்களுக்கு சகல காரியசித்தியும் கிடைக்கும். சிவலிங்கத்தில், பிரம்மன் வலது பக்கத்திலும், விஷ்ணு இடது பக்கத்திலும், ருத்திரன் இதயத்திலுமாக மூவரும் ஐககியமாயஈருக்கிரார்கள் என்று சிவபுராணம் கூறுகிறது.


தொடரும் 


  








                                   



















சனி, 24 ஜூலை, 2010

SIVAPPARAMPORUL-6



திருவண்ணாமலை- ஜோதி  
    


  சிவப்பரம்பொருள்-6 
     திருமதி சாந்தா வரதராஜன் 
கடையுகம் அதனில் தோன்றும் 
   அண்டங்கள் கழிய உண்டு 
சுடலையில்  நடித்தாய்  போற்றி 
  சுடர் ஒளிப்பிழம்பே போற்றி 
விஷஅரவு  அணிந்தாய்  போற்றி 
   மெய்உணர்வு  எய்தி  நின்ற 
அடியவர்க்கு  அருள்வாய் போற்றி 
    அண்ணலே  போற்றி  போற்றி 


கூற்றுஉயிர்  குடித்த  பைம்பொன் 
   குழைகழல்  தானோய் போற்றி  
ஏற்று உயர்கொடியாய் போற்றி 
     ஈடிலா முதலே போற்றி 
ஆற்றரும் தவத்தின் மிக்கோர் 
   அறிந்துணர் பொருளே போற்றி 
ஊற்று தேன்கொன்றை வேணி 
    ஒருவனே போற்றி போற்றி 


இவ்வாறு இருவரும் கொன்றை வேணியனை உளம்கனிந்து உருகித்துதித்தனர்.


முற்றும் 
சுபம் 
HAVE A NICE DAY 
















   












Artifice 
The Presence of Siva (Mythos: The Princeton/Bollingen Series in World Mythology)
I Love Sivas Embroidered Cap
Meditation Statue Lord Siva Brass Figurine (mst079)
Mystikats - Siva
The Presence of Siva (Mythos: The Princeton/Bollingen Series in World Mythology)  






      











 HAVE A NICE DAY

சனி, 17 ஜூலை, 2010

SIVAPPARAMPORUL-5

HAVE A NICE DAY



LORD SIVA
                                    
                            


     சிவப்பரம்பொருள்- 5
 திருமதி  சாந்தா வரதராஜன் 
 varadshantha@yahoo.com     




மாதவனும் மலரோனும் எம்பெருமானைக் குறித்து பக்தியோடு 
துதித்த தோத்திரம். 


 நினைப்புமாய் மரப்புமாகி 
     நினைவினுக்கு எட்டாதோன்றாய் 
அனைத்துமாய் நின்றாய் போற்றி 
       அருமறைக்கொழுந்தே போற்றி 
கனைத்து வண்டிமிர விள்ளும் 
         கடுக்கையங் கண்ணியோடு  
புணிற்று வெண் தின்கட்கண்ணி 
      புனைந்த செஞ்சடையாய் போற்றி 


நள்ளிருட் பிழம்பு மேயு 
    நாகினந்த் திங்கள் நோக்கிப் 
புள்ளிமான் பிள்ளை துள்ளும் 
    புனைமலர் காத்தாய் போற்றி 
உள்ளோடு புறமாய் எங்கும் 
   உறைந்த அருளிறைவா போற்றி 
வெள்ளியம் பொருப்பில் வாழும் 
    விமலனே போற்றி போற்றி 


பொறுப்பு வில்குழைய வாங்கிப் 
     பிரம்எரி படுத்தாய் போற்றி 
மருக்கமழ் குமுதச் செவ்வாய்  
     மலைமகள் கொழுந்தே போற்றி 
நெருப்பு உருவெடுத்த முன்னர் 
    நெடு விசும்புரிவி நின்ற 
அருட்பெருங் கடலே போற்றி 
    அமலமே போற்றி போற்றி 


தொடரும் 


   








   












                           

சனி, 10 ஜூலை, 2010

SIVAPPARAMPORUL-4

HAVE A NICE DAY



LORD SIVA 
                          


     சிவப்பரம்பொருள்- 4 
 சாந்தா வரதராஜன் 
 varadshantha@yahoo.com     

    ஈசுன் அவர்கள் துதிகளால் மகிழ்ந்து மாதவனைப் பார்த்துச் சொன்னார்,'என்னுடைய வலப் பக்கத்தில் தோன்றியவர் மலரோன்,நீ என் இடப் பக்கத்தில் உதித்தவன். என் மற்ற புதல்வர்களான கணேசனுக்கும், குமாரனுக்கும் ஒப்பானவர்கள் நீங்கள். உங்களுக்கு வேண்டியதை கேளுங்கள் தருகிறேன்'. இவ்வாறு ஈசன் கூறியதும் நான்முகன் அவரைப் பணிந்து எழுந்து, 'பிரபோ', தங்களின் அணுகரகதிற்கு பாத்திரனாகிவிட்ட எனக்கு வேறு என்ன வேண்டும் . தங்களிடம் என்றும் பக்தி குன்றாதிருக்க அருள் செய்வதையே வேண்டுகிறேன்' என்று பிராத்தித்தார்.

 'நான்முகா   உன் விருப்பம் நிறைவேற அணுகரகிதோம். என்னிடம் உனக்குப் பக்தி என்றும் குன்றாதிருக்கும்' என்று ஈசன் அருள் செய்தார். பின்னர் மாதவனைப் பார்த்து, 'பத்ம கர்ப்பத்தில் நான்முகன் உனக்கு புத்திரனாக உந்திக்கமலத்தில் தோன்றுவான். அந்நாளில் சோதிவடிவமாய் என்னை தரிசிப்பீர்கள்' என்று அணுக்ரகித்து மறைந்தார்.அது முதல் ஈசன் லிங்கதிலே இனிது அமர்ந்து அவரை வழிபடும் அன்பர்களுக்கு அருள் பாலித்து வருகின்றார். 


தொடரும் 



   












   






















         


சனி, 3 ஜூலை, 2010

KAVITHAI

HAVE A NICE DAY



                                    

UNITED WAY

                  வழி 
     திருமதி சாந்தா வரதராஜன்      


    விழித்தவன் கண்களுக்குப் பட்டதெல்லாம் வழி!
விழிக்காதவன் கண்களுக்கு வாழ்கையே சுழி! 
விழி பெற்றவன் வாழ்க்கைக்கு நம்பிக்கையே வழி! 
விதையிட்டவன் நம்பிக்கைக்கு உழைப்பே வழி!
பழி சொல்பவன் நாக்கினிலே நஞ்சே வழி!
பலன் கொடுக்கும் மனிதனுக்கு அன்பே வழி!
சுழியைக் கூட கோடியாக்கும் அறிவாளியின் வழி!
சுமைதாங்கும் வாழக்கை கூட சுகமான வழி!


நேர்மை மனமுடையோற்கு மனசாட்சியே வழி!
நெருஞ்சி எண்ணமுள்ளவற்கு நெஞ்சிலேது வழி! 
சீர்மை ஒழுக்கம் மனிதற்கு சிறப்பு  வழி!
சிறகுள்ள சிந்தனைக்கு இருட்டு கூட வழி!
பார்செழிக்கப் பல்லோர் காட்டினார் பல வழி!
பயன் வாழ்வு வாழ்வதே எதிர்கால நல வழி! 
கார்மேகம் பொழிந்தால் தான் சோற்றுக்கே வழி!
கவிச் சாலையிடும் கவிஞரெல்லாம் நாட்டுக்கே வழி!


வந்தவழி பத்துமாதம் தாய் வயிற்று வழி!
வாழ்ந்து போகும் போது மீதமோ ஆறடி வழி!
சொந்த வழி இருந்தும் பலர்குத் துயர் வழி!
சொந்தமிருந்தும் முதுமைகள் காணுது சோக வழி!
வந்தவழியை மறந்தவ்ர்கோ பல உயர் வழி!
வாழ்வில் இன்னும் ஏழைக்கு வறுமை வழி!
முந்திக்கொள்ளும் மூளைக்கோ முதல் வழி!
மூளைவழி ஒன்றே வாழ்வின் மூலதன வழி!
                        சுபம்