OWL

OWL
OWL

WELCOME

WEB HOTING

Web.com Web Hosting

T.NAGAR SHOPS


View Retail stores in T-Nagar in a larger map

traffic

click bank

amazon

POST A COMMENT

திங்கள், 31 ஜனவரி, 2011

AWARD FOR SANTHAVARADHARAJAN

HAVE A NICE DAY

 பொங்கல் வாழ்த்தக்கள் 
                          

       SRIMATHI SANTHA VARADARAJAN  one of the contributors in this site getting award for her literary contributions: 






     
      பாவேந்தர் பாரதிதாசன் விருது 
       மனித நேயச் செம்மல் மலேஷியா எஸ். பழனிவேல் நினைவு அறக்கட்டளையின் சார்பில் ஐந்தாம் ஆண்டை முன்னிட்டு பல்வேறு சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா கடந்த  8.1.2011 அன்று அம்பத்தூர் புதூரில் நடைபெற்றது. இவ்விழாவில் லிபர்ட்டி டைம்ஸ் - இதழில் எழுதிவரும் திருமதி. கவிஞ்ஞர் சாந்தாவரதராஜன் அவர்களுக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருது வழங்கி கௌரவிக்கிப்பட்டார். திரு. ஜே. குணசேகரன், காவல் கண்காளிப்பாளர். விழாவில் பங்கேற்று பல்வேறு சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கினார். புதுகை மா.உதயகுமார் வரவேற்புரை ஆற்றினார். கவிஞ்ஞர் அண்ணா கண்ணன் விருதுபெற்ற சாதனையாளர்களின் குறிப்புகளை விளக்கி உரையாற்றினார்.


  COURTASY:  Liberty Times,
                            Friday,January 14,2011 
                          ----------------            

சனி, 29 ஜனவரி, 2011

DHANVANTHIRI-5


 HAVE A NICE டே

 தன்வந்திரி பகவான் 
  DHANVANTHIRI-MARUTHUVAKKADAVUL-5

திருமதி சாந்தா வரதராஜன் 

       தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தின் எதிர்காலத் திட்டங்கள் பல உள்ளன. முதியோர் இல்லம்,மருத்துவமனை, அன்னதானக் கூடம், தியான மண்டபம் போன்றவை அமைக்கத் திட்டமிட்டுச் செயல்படுத்தப்படுகிறது. 

   இத்தகைய பெருமையுடைய,சக்தி வாய்ந்த ஸ்ரீதன்வந்திரி பகவானை எளிய முறையில் இல்லறங்களில் வழிபடலாம். அன்றைய தினம் அதிகாலையில் எழுந்து, நீராடிவிட்டுப் பூஜை அறையில் விளக்கேற்ற வேண்டும். தன்வந்திரி, திருமாலின் அம்சம் என்பதால் மகாவிஷ்ணுவின் படம் வைத்து அதற்குப் பொட்டு வைத்துப் பூப்போட்டு, துளசி மணி மாலை அணிவிக்க வேண்டும். தன்வந்திரி மந்திரங்களைப் பக்தியுடன் சொல்லி, 

   "அமுதத்தை ஏந்தி நிற்கும் அருள் கரத்தாய்              சரணம்           
     குமுதச் செல்வி மணவாளன் குனவடியே சரணம் 
       சேய் எங்கள் நோய் நீக்கி காத்திடுவாய் சரணம் 
       தாய்போல தரணி காக்கும் தன்வந்திரியே சரணம்" 

       என வேண்டிக் கொள்ள வேண்டும்.

     தூப,தீபம் காட்டிய பின், பாயசம் நிவேதனம் செய்யலாம்.

      இவ்வாறு ஸ்ரீ தன்வந்திரி பகவானை மனதார வணங்கி வழிபாடு செய்தால் பக்தர்களின் இல்லம்  நோய்கள் ஏதும் அண்டாத ஆரோக்கியமான வீடாக விளங்கும் என்பது திண்ணம்.

                             சுபம் 

                                                                  

   













Thridosha Siddhaantha

  

சனி, 22 ஜனவரி, 2011

ANNAI THERASA

HAVE A NICE DAY

 அன்னை தெரசா        
       கவிஞ்ஞர்களின் பார்வையில் 
        அன்னை தெரசா  
            இயற்றியவர் : 
  கவிஞ்ஞர் திருமதி சாந்தா வரதராஜன் 
       அன்பும் கருணையும் 
        அன்னையின் நற்குணங்கள் 
        அற்புத சேவைகள் 
         அன்னை தெரசாவின் இயல்புகள் 


       திண்ணிய மனமும் 
       தெளிந்த அறிவும் 
       அன்னியர் ஆயினும் 
       தொண்டுகள் புரியும் பண்பாளர் 


       தனக்கென்று வாழா 
       பிறருக்கு உதவுபவர் 
       தன்னலம் கருதா 
       சேவையில் உயர்ந்த உத்தமர் 


     தொழு நோயாளிகள் 
     தொழும் தெய்வம் - இவர் 
     மக்கள் சேவையே 
     மகேசன் சேவை என வாழ்ந்தவர் 


    இவரது இயற்பெயர் ஆக்னெஸ் 
    இன்முகம் இனிய சொல்லுடன் 
    இவர் ஆற்றிய சேவைகள் 
    இணைந்து அளித்த பெயர் 'தெரசா'


    பல்வேறு சாதனைகளுக்கு 
    பாரத ரத்னா விருதும் 
     உலக சமாதானத்திற்கு 
    உன்னத நோபல் பரிசும் பெற்றவர் அன்னை.


                             -------------------  
   










   











சனி, 15 ஜனவரி, 2011

PONGAL

HAVE A NICE DAY


 WISH YOU HAPPY PONGAL
                      
        
           பொங்கல் கொண்டாடுவோம் 
   திருமதி சாந்தா வரதராஜன் 


    ஏற் பிடிக்கும் உழவர் வாழ 
    ஏற்றத்தாழ்வு  தகர்ந்திட 
    தன்னலத்தார் திருந்திட 
    தாயகத்தின் பகை ஒழிய 


   கார் முகிலை வாழ்த்திட 
   கன்னித் தமிழ் வளர்ந்திட 
   கருமித்தனம் நீங்கிட 
    கருணையுள்ளம் மலர்ந்திட 


   போர் அரக்கன் பொசுங்கிட 
   பொழுதெல்லாம் மகிழ்ந்திட 
    பக்தி மனம் வளர்ந்திட 
    பழமையினை மறந்திடாமலே 
                                                 - பொங்கல்  கொண்டாடுவோம் 


      தொழில் புரிவோர் உயர்ந்திட 
      தோழர்களாய் வாழ்ந்திட 
      சாந்தி பண்பு வளர்ந்திட 
      சாதிப் பேய்கள் ஒழிந்திட 


    காந்தீய வழி கடை பிடிக்க 
    கடமை யினை உணர 
    கால்நடைகள் பெருகிவாழ 
    கருத்தினிலே ஒளி மிளிர 


   ஓர் இனமாய் வாழ 
   ஒற்றுமையை காத்திட 
   சக்தி உணர்வு பெருகிட 
    சமாதானம் ஓங்கிட 
                      - பொங்கல் கொண்டாடுவோம் 
                       -----------


    










   














     

சனி, 8 ஜனவரி, 2011

DHANVANTHIRI- MARUTHUVAKKADAVUL-4

HAVE A NICE DAY

 தன்வந்திரி பகவான்
                                

DHANVANTHIRI-MARUTHUVAKKADAVUL-4


திருமதி சாந்தா வரதராஜன்                    
     அனைத்து விதமான சர்ப்ப தோஷங்களையும் நிவர்த்தி செய்யும் வகையில் இவ்வுருவம் அமைந்துள்ளது. மேலும் இதே சமயத்தில் சக்கரத்தாழ்வாரும் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.


   27 நட்சத்திரங்களுக்கும் 12 ராசிகளுக்கும் முறையே அமைந்துள்ள யாக குண்டங்களில் அவர் அவர்களுக்குரிய ஹோம குண்டங்களில் அவர்களே உலக ஷேமதிற்காகவும், குடும்ப ஷேமதிற்காகவும்  விசேஷ நாட்களில் ஹோமங்கள் செய்து பலன் பெற்று வருகின்றனர்.இங்கு வரும் பக்தர்கள், இங்கு அமைந்துள்ள நித்திய நோய் நிவாரண ஹோமத்தில் தங்கள் வேண்டுதலுக்கேற்ப, பலவிதமான மூலிகளைக் கொண்டு சங்கல்பம் செய்து, மந்திரங்கள் ஜபித்து ஹோமங்கள் செய்து நோய்களிலிருந்து நிவாரணம் பெறுகின்றனர். அமாவாசை, பௌர்ணமி, சுவாதி, அஸ்தம்,திருவோணம் நாட்களில் நோய் தீர்க்கும் ஒவ்ஷதம் வழங்கப்படுகிறது. சங்கடங்களை தீர்க்கும் ஸ்ரீ சுதர்ஷன ஆழ்வார், இங்கு விசேஷமான சக்கர வடிவில் 16 விதமான கைகளைக்கொண்டு 16 விதமான ஆயுதங்களுடன், சங்கு சக்கரத்துடன் அழகிய திருமுகத்துடன் ஷட்கொணத்தில் சிரித்த முகத்துடன் அமைந்துள்ளார். இவரை வழிபட்டால் சங்கடங்கள் நீங்கி சந்தோஷ வாழ்வைப் பெறலாம். இங்கு ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர் சமீபத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுக் காட்சி அளிக்கின்றார்.இவர் ஒரு கையில் சஞ்சீவி மலை, மற்றொரு கையில் கதை தாங்கி தன் மார்பில் ஸ்ரீஇராமபிரானை ஏற்றுக்கொண்டு வாலில் மணியைக் கொண்டு 8-1/2  அடி உயரத்தில் நின்ற கோலத்தில் உருவாக்கப்பட்டு விளங்குகிறார்.


  'Service to mankind is service to God' என்பதற்கேற்ப, இங்கு ஒவ்வொரு மாதமும் மூன்றாவது சனிக்கிழமைகளில் அன்ன தானமும், இரண்டாவது ஞாயிற்றுக்கிழமைகளில் இலவச மருத்துவ முகாமும் நடைபெறுகிறது. இலவச மருத்துவப் பரிசோதனையுடன், இலவசமாகத் தேவையான மருந்துகளும் மருத்துவ முகாமிலேயே உடனே வழங்கப்படுகிறது. 


   தொடரும் 


     










 Dhanvantari
Studies on Medicinal Plants and Drugs on Dhanvantari Nighantu


Bharata ke pranacarya =: Indian masters of the science of life : Asvinikumara, Dhanvantari, Susruta, Atreya Punarvasu, Kasyapa, Kumara Bhartr Jivaka, Caraka, ... aura samskrti ka gaveshanapurna paricaya


                     

சனி, 1 ஜனவரி, 2011

DHANVANTHIRI-MARUTHUVAKKADAVUL-3

HAVE A NICE DAY

 தன்வந்திரி பகவான் 
        


DHANVANTHIRI-MARUTHUVAKKADAVUL-3


திருமதி சாந்தா வரதராஜன்


    இவ்வாறு அமைக்கப்பட்ட கர்ப கிருகத்தின் மேல் இன்னொரு கர்ப்ப கிருகம் அமைக்கப்பட்டு அதன் மேல் 'தன்வந்திரி பெருமாள்' ஏழு அடி உயரத்தில் பத்ம பீடத்தில், நின்ற கோலத்தில் சதுர்புஜங்களுடன் சங்கு ,சக்கரம், அமிர்த கலசம், மற்றும் சிந்தல் கொடி என்னும் மூலிகைச் செடியும் வைத்துள்ளார்.மருத்துவருக்கான 'ஸ்டெதாஸ்கோப்' கைக்கடிகாரம் அணிந்து கொண்டு  மகாலட்சுமியைத் தன் மார்பில் கொண்ட புன்சிரிப்புடன் காருண்ய முகத்துடன் பாண்டுரங்கனாகவும், குருவாயுரப்பனாகவும் காணவரும் பக்தர்களுக்குத் திருக்காட்சி அளித்துக்  கொண்டு இருக்கிறார்.


   இனி இக்கோயிலின் மற்ற பிரகாரங்களையும், தெய்வங்களையும் காணலாம். இங்கு ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்ட ஸ்ரீ வினை தீர்க்கும் விநாயகர்,பிணி தீர்க்கும் ஸ்ரீ தன்வந்திரி பகவானும் பிரதிஷ்டை செய்யப்பட்டு அருள் பாலித்துக் கொண்டு இருக்கிறார். இந்த ஆலயத்தில் மரணபயம் போக்கி,மாங்கல்ய பலம் அளிக்கும் ஸ்ரீ மகிஷாசுர மர்தினி 8  அடி உயரம், 4  அடி அகலமும் கொண்ட உருவமாக 18  கைகளில் 18  ஆயுதங்கள் தாங்குபவளாக வெற்றிக் களிப்பில் மகிழ்ச்சி கொண்டவளாக வடிவமைக்கப்பட்டுக் காட்சி தருகின்றாள். மகிஷனை வென்று சிம்ம வாகிநியாகச் சிரித்த முகத்துடன் அருள் பாலிக்கின்றாள். அன்னைக்கு அணிவித்திருக்கும் கால் கொலுசு சிலையோடு ஒட்டி இனைந்து அமைந்திருப்பது அற்புதக் காட்சியாகும். அடுத்து,நாகருடன்  எட்டு நாக ஆபரணதுடன், புன்முறுவலோடு, கஷ்டம் தீர்க்கும்  ' அஷ்ட நாக கருடன்' வடிவில் பக்தர்களுக்குக் காட்சி தருகிறார்.   வியாதிகள் அகல அருள் புரிகிறார். இந்த ஆலயத்தில் மற்றொரு சிறப்பு அம்சம், மாதா , பிதாவை நினைத்து அவர்களை வேண்டி வணங்கி, நினைவூட்டிக் கொண்டு, விஷ்ணு பாதத்தில் பூக்கள் சார்த்தி நேர்த்திக் கடனை முடிக்கும் பொருட்டு அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பிதுர்தோஷம் நீங்கி, நமது நோய்கள் தீர வழி கிடைக்கும். அடுத்து, அரச மரமும் வேப்ப மரமும் இனைந்து அதன் கீழ் ஏக ரூபம், ஏக சரீரம், ஏக தரிசனம் என்ற முறையில், உடல் பாகம் கேதுவாகவும், தலைபாகம் ராகுவாகவும், கால்பாகம்   பாம்பாகவும் அமைக்கப்பட்ட ஸ்ரீ ராகு - கேது சமீபத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.


தொடரும் 


   










 Tanvantiri pakavan tailam 500: Olaic 
cuvatiyiliruntu
The panchakarma treatment of Ayurveda
Ayurveda vidhata: Mahakavya (Hindi Edition)
Curacintamani